யோகா முத்ரா
 
யோகிகள்  இந்த  இருக்கையிலிருந்து  பயின்ற காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டது.
செய்முறை:
 
.கால்களை  நீட்டி உட்கார வேண்டும்
 
.வலக்காலை இடது தொடை  மேல் வைக்கவும்.இடது காலை வலது தொடை மேல் வைத்து பத்மாசன  இருக்கை நிலைக்கு வர வேண்டும்.
 
.கைகளை பின் கொண்டு வந்து வலது பக்க மணிக்கட்டை இடது கையால் பிடிக்க வேண்டும்.
 
.மெதுவாக,மூச்சினை வெளியில் விட்டு,நெற்றியால் தரையைத் தொட வேண்டும். சாதாரண  சுவாசத்தில் ௩௦ வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்,பிறகு ஆரம்ப நிலைக்கு வரவேண்டும்.
 
பலன்கள்:
 
.குடல் பித்தப்பை நன்கு நசுக்கப்படுவதால் நல்ல செயலாக்கம் பெறுகிறது.
 
.மலச்சிக்கல் நிரந்தரமாக நீங்கும்.
 
.குடல் வாதப் பிணி அகலும்.
 
.தொந்தி குறையும்.