விரிஷ்ஷிகாசனம்
செய்முறை:
௧.சிரசாசனத்தில் ஒரு நிலைக்கு வந்த பிறகு முழங்காலை மடக்கி,உடலில் ஒரு வளைவு கொடுக்கவும். இரண்டுமுங்கைகளையும் தலைக்கு இருபக்கமும் வைத்து உள்ளங்கைகளைத் தரையில் படுமாறு வைக்கவும்.
௨.கால் பாதங்களின் உயரத்தைக் குறைத்து தலையை நோக்கி வர வேண்டும்.
௩.தலையைப் பின்புறமாக இழுத்து மேலே உயர்த்தவும்.
௪.மேல் கையை நேராக உயர்த்தி கணுக்கால்கள் தலையில் படுவது போல் வைக்க வேண்டும்.
௫.சிரமமில்லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரமிருக்கவும்.
௬.மெதுவாகச் சிரசாசனம் வந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
௨.நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது.
௩.அனைத்துச் சுரப்பிகளும் சீராக இயங்க உதவுகிறது.
௪.கை,கால்கள் வலிமையடைகின்றன.