வீராசனம்
செய்முறை:
௧.மண்டியிட்டு உட்காரவும், முழங்கால்களை இணைத்து வைத்துப் பாதங்களை சுமார் ஒன்றரை அடித் தள்ளி வைக்கவும்.
௨.புட்டத்தைத் தரையில் வைக்கவும்,முதுகை நேராக நிமிர்த்தி உட்காரவும்.
௩.கைகள் இரண்டையும் பிணைத்து,உள்ளங்கைகள் மேல் நோக்கியிருக்கும் வண்ணம் கரங்களைத் தலைக்கு மேலே உயர்த்தவும்.
௪.முழங்கை மடங்காமளிருக்க வேண்டும்.இதே நிலையில் ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
௫.இந்நிலையில் சிறிது நேரமிருந்து பின் கைகளைப் பிரித்து உள்ளங்கால்களின் மீது வைத்து முகவாயை முழங்கால் மீது வைக்கவும்.
௬.இதில் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.முழங்கால்,மூட்டு வலி ,கீழ்வாதம் ஆகியவற்றை நீக்கும்.
௨.கை,கால்கள் வளைவுத் தன்மைப் பெறுகின்றன.
௩.இரத்த ஓட்டம் சீராகிறது.