வக்ராசனம்
 
செய்முறை:
 
.விரிப்பில் இருகால்களையும் நன்றாக நீட்டி கைகளைப் பின்புறமாக விரல்கள் வெளிப்புறத்தில் இருக்குமாறு வைத்து உட்காரவும்.
 
.முதலில் இடக்காலை மடக்கி,இடக்காலின் பாதம், வலக் காலின் முழங்காலுக்கு அருகில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
 
.உடலை இடப்பக்கம் முறுக்கி,வலக்கையை நன்றாக முழங்கை மடங்காமல்   இடக்காலுக்கு அருகில் நீட்டவேண்டும்.
 
.வலக்கையின் ஆட்காட்டி விரலைக் கொக்கி போல் அமைத்து, இடக்காலின் கட்டை விரலைப் பிடிக்க வும்,அதே நேரத்தில் இடக்கையை தரையில் வைக்கவும்.
 
.மேலும் இடப்பக்கம் மூச்சை வெளியில் விட்டு,உடலை முறுக்கவும்,பார்வை முழுவதும் இடப்பக்கத் தோள்பட்டையின் மூலமாக இருக்குமாறு வைக்க வேண்டும்.
 
.இந்நிலையில் சில நிமிடம் இருந்து விட்டு ,, வழியாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
குறிப்பு:
 
இதே மாதிரி வலது பக்கமும் செய்ய வேண்டும்
 
பலன்கள்:
 
.சோம்பலை அகற்றிச் சுறுசுறுப்பைத் தருகிறது.
 
.இடுப்பைச் சுற்றியுள்ள தேவையற்ற சதையைக் குறைக்கிறது.
 
.முதுகுவலி,இடுப்புவலி போன்றவற்றை  நீக்குகிறது.
 
.மலச்சிக்கல்,அஜீரணம்,நீரிழிவு போன்ற நோய்களுக்கு இது ஏற்ற  ஆசனமாகும்.