.திரிகோணாசனம்
 
செய்முறை:
.கால்கள் இரண்டையும் விரித்து,கைகளைப் பக்கவாட்டில் விரித்து உள்ளங்கை தரையைப் பார்ப்பது போன்று நிற்க வேண்டும்.
.அப்படியே வலது புறமாக வளைந்து வலது கையால் வலது பாதத்தை தொடவும். முழங்காலை மடக்குவதோ , இடுப்பை அசைப்பதோ  கூடாது.
.இடது கையை நேராக மேலே உயர்த்தியிருக்க வேண்டும்.
. விநாடிகள் இருந்த பிறகு இதே போல்   இடது புறமாக வளைந்து இதே முறையில் இடது பக்கம்  செய்ய வேண்டும்.
 
 
 
பலன்கள்:
 
.முதுகெலும்பிற்கு நெகிழும் தன்மையைக் கொடுக்கின்றது.
.வயிற்றுப்  பகுதி வலிமை பெறுகிறது.
.மலச்சிக்கல் நீங்குகிறது.
.இடுப்பு சதையைக்  குறைக்கிறது.