௨. தடாசனம்
செய்முறை:
இது பாத ஹஸ்தாசனத்திற்குப் பிறகு செய்யவேண்டிய ஆசனமகும்.
௧.இரு கால்களையும் சுமார் பத்து செ.மீட்டர் இடை வெளி விட்டு கைகள் பக்கவாட்டில் தொங்கியவாறு நிற்கவும்.
௨.மூச்சை இழுத்து கொண்டே குதி கால்களை தூக்க வேண்டும்.அதே நேரத்தில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தி தலைக்கு மேலே நேராக கே கொண்டு சென்று உள்ளங்கைகள் ஒன்றோடோண்டு ஒட்டி இருக்குமாறு செய்ய வேண்டும்.
௩.நிலை தடு மாறாமல் சுமார் ௫ நொடிகள் அல்லது ௬ நொடிகள் சுவாசத்தை நிறுத்தி அதே நிலையில் நிற்கவும்.
௪.மூச்சை வெளி விட்டுக் கொண்டே மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுப்பெறுகின்றன.
௨.இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறு மாதவயிற்றுத் தசைகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
௩.மார்பு நன்கு விரிவடைகிறது.