சூரிய நமஸ்காரம்
பழங்கால மனிதன்
சூரியனைக் கடவுளாக
நினைத்து வாழ்ந்து வந்தான் அதனால் அனைத்திற்கும் சூரியனை வழி பட்டு ஆரம்பித்தனர் .அதே போல் யோகாசனங்களிலும் சூரிய நமஸ்காரத்தை முதலில் ஆரம்பித்து மாற்ற ஆசனங்களை செய்து முடிப்பர்.இது காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியனைப் பார்த்து செய்யக் கூடியதாகும்.இது 12 படிகளும் ,12 ஆசன நிலைகளும் கொண்டதாகும்.
நிலை 1: பிராணாமாசனம்
கைகள் இரண்டையும் குவித்து நமஸ்காரம் செய்வதுபோல் வைத்து சூரியனை நோக்கி நேராக நிற்கவும். கால்கள்
இரண்டும் சேர்ந்திருக்க நேராக நின்ற நிலையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவும்.
நிலை 2:ஹஷ்துட்டாசனம்
கால்முட்டி மடங்காமல் கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னே கொண்டு சென்று உடலை பின்னோக்கி வளைக்க வேண்டும்.இதைச் செய்யும் பொது மெதுவாகவும், மூச்சுக் காற்றை உள்ளிழுத்துக் கொண்டும் செய்ய வேண்டும்.
நிலை 3:பாதஹஸ்தாசனம்
உடலை முன்னுக்கு வளைத்து நெற்றியால் முழங்காலைத் தொடவும் உள்ளங்கைகள் இரண்டும் கால்களுக்கு இரு பக்கமும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். முழங்கால் மடங்கக் கூடாது.இதைச் செய்யும் போது மூச்சை வெளியேற்றிக் கொண்டே செய்ய வேண்டும்.
நிலை 4:அஷ்வசஞ்சலாசனம்
இந்நிலையில் மூச்சை
இழுத்துக் கொண்டே வலது காலை பின்னால் தள்ளி இடது காலை இரண்டு கைகளுக்கிடையில் வைத்து புட்டப்பகுதியை இடது குதிகாலுக்கருகில் கொண்டுவரவும்,முகம் நேராகப் பார்க்க வேண்டும்.
நிலை 5:தூவி
அஷ்வ சஞ்சலாசனம்
இடதுகாலையும் பின்னுக்குக்
கொண்டுசென்று உள்ளங்கைகளாலும்,கால்நுனி விரல்களாலும் நிற்கவும் உடம்பை வளைக்காமல் நேரே வைத்து தலையிலிருந்து கால் வரை நேர்கொட்டிலிருக்க வேண்டும்,மூச்சுக்
காற்றை முழுவதுமாக வெளியேற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
நிலை 6:சாஷ்டங்க நமஸ்காரம்
உள்ளங்கைகளையும்,முன்பாதங்களையும் அசைக்காது,மார்பை முன்னே தள்ளி நெற்றியால் நிலத்தைத் தொட வேண்டும்.இதில் நெற்றி,மார்பு,கைகள்,முட்டி பாதங்கள் ஆகிய எட்டு அங்கங்கள் நிலத்தைத் தொடுமாறு இருக்க வேண்டும்.இது சாஷ்டங்க நமஸ்காரம் செய்வதாகும் .இந்நிலையில் மூச்சை வெளியேற்றவும்.
நிலை 7:புஜங்காசனம்
மூச்சை இழுத்துக் கொண்டே உடலை வளைத்து மேலே தூக்குங்கள் . முதுகெலும்பு
உட்பக்கமாக நன்கு வளைய வேண்டும்.தலையை உயர்த்தி மேலே பார்க்க வேண்டும்.
நிலை 8:அதமுக்த சாவாசனம்
தலையைத் தரையை
நோக்கிக் கொண்டு வரவும்.மூச்சுக் காற்றை
வெளியேற்றி,குதிகால்களும்.உள்ளங்கைகளும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
நிலை 9:அஷ்வசஞ்சலாசனம்
நிலை நான்கினை செய்யவும்.
நிலை 10: பாத
ஹச்தாசனம்
நிலை மூன்றினை செய்ய
வேண்டும்.
நிலை 11: ஹஸ்த உட்டாசனம்
நிலை இரண்டினை செய்ய
வேண்டும்.
நிலை
12:பிரணாமாசனம்
நிலை ஒன்றுக்கு
வரவும்.