சித்தாசனம்
செய்முறை:
௧. .கால்களை முன் நீட்டி உட்காரவும்.
௨.இடது காலை மடித்து குதி காலை குதத்தை ஒட்டி வைக்கவும்.
௩.இதேபோல் வலது குதிகால் குறியை ஒட்டி வைக்கவும்.அதே சமயத்தில் இடது கெண்டை கால் மேல் வலது கெண்டைக் கால் இருக்க வேண்டும்.
௪.தொடை,முழங்கால் தரையிளிருக்க நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும்.
௫.கைகள் இரண்டும் முழங்காலுக்கு மேலே உள்ளங்கை வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை மூடி தியானம் செய்து மனதை ஒருநிலைப் படுத்தவும்.
௬.பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.மனம் அமைதி அடைகிறது.
௨.முகம் பொலிவு அடைகிறது.
௩.பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.