சிரசாசனம்
இது ஆசனங்களின் அரசி என்று பெயர் பெற்றதாகும்.
குறிப்பு:
இத்தனை முதலில் பழகுபவர்கள் சுவற்றை ஒட்டி ௨ அல்லது ௩ அங்குல இடைவெளியில் வைத்து செய்யவும்பயிற்சியாளர் அருகில் இருக்கப் பயிற்ச்சி செய்வது நல்லது.
செய்முறை:
௧.முட்டி போட்டு உட்காரவும்.
௨.முன்புறமாகக் குனிந்து முழங்கை மூட்டுகள் தரையில் நன்றாக அழுத்தியிருக்கட்டும்.இரு கைகளுக்கும் இடையில் உள்ள தூரம் குறைவாக இருக்க வேண்டும்.
௩.கைவிரல்கள் பிணைக்கப் பட்டு ஒரு கோப்பை போல் இருக்க வேண்டும்.
௪.கால் முட்டிகளை தலையருகே கொண்டு வாருங்கள் முனபாதம்தறையில் ஊன்றி இருக்கட்டும் .
௫.தலையின் உச்சியை மட்டும் விரிப்பின் மீது வைத்து,தலையின் பின்புறம் கோப்பை போல் உள்ளங்கைகளைத் தொடும்படி வைக்கவும்.
௬.கால்விரல்களை தலைக்கு அருகில் நகர்த்தி முழங்கால்கலித் தரியாயி விட்டு உயர்த்தவும்.
௭.முழங்கால்களை மடக்கிய படி கால்களைத் தரையில் இருந்து உயர்த்தவும்.
௮.கால்களை நீட்டி முழு உடலும் தரைக்குச் செங்குத்தாக அமைவது போல் தலை மீது நிற்கவும்.
௯.மெதுவாகச் சுவாசித்து சிலவினாடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு மீண்டும் படிப்படியாக
ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் நரம்பு மண்டலம் சீரடையும்.
௨.இரத்த நாளங்களில் உண்டாகும் வீக்கம்,தூக்கமின்மை போன்றவை நீங்கும்.
௩.குடலிறக்கம் என்னும் ஹெரன்யாவுக்கும் இது ஏற்ற ஆசனமாகும்.
௪.மனதை ஒரு நிலைப் படுத்தும்.
௫.மலச்சிக்கல்,வயிற்றுவலி,தலைவலி,மூலம் ஆகியவை நீங்கும்.