சர்வங்காசனம்

 

செய்முறை:

 

1.விரிப்பில் மல்லாந்து படுத்துத் தலைக்கு மேல் கைகளை நீட்டவும்.

 

2.கால்களைச்  சேர்த்து,மெல்ல உயரத் தூக்கி,முழங்காளைவளைக்காமல்தரையிலிருந்து 45  டிகிரி  சாய்வில் நிறுத்தவும்.

 

3.கால்களை மேலும் உயர்த்தி 90 டிகிரிக்கு கொண்டுவரவும்.

 

4.இடுப்புப் பகுதியை மேலே உயர்த்து,மேல் உடலை உயர்த்திக் கைகளால் முழங்கைகளைத் தரையில் ஊன்றித்  தாங்கவும்  தலையைத்  தூக்கக் கூடாது.

 

5.முதுகை இரு உள்ளங்கைகளால் தாங்கிக் கொள்ளவும்.இடுப்புப் பகுதியிலிருந்து உடற்பகுதியைச் செங்குத்தாக முகவாய்க் கட்டையை நெஞ்சுக்குழியில் அழுத்து  கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டுவரவும்.

 

 

6.உடற்பகுதியை நேராக்கிச் செங்குத்தாகக் கொண்டுவரவும்.உடலின் அனைத்து எடையும் தோளுக்குக் கொண்டுவரவும்.அதே சமயத்தில் சுவாசம் சீராக இருக்க வேண்டும்.தலை தரையைத் தொட்டுக் கொண்டிருக்க  அதிர்ச்சிகளைத் தவிர்த்து இரண்டு நிமிடங்கள் வரை  இறுதி நிலையில் இருக்க வேண்டும்  

 

குறிப்பு :

 

இவ்வாசனம் செய்யும் போது எக்காரணம் கொண்டும் சிரிக்கக் கூடாது.

 

பலன்கள்:

 

1.தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக  இருக்க உதவுகிறது.

 

2.இதயம் பலமடையும்.

 

3.கண்,காத்து,மூக்கு,தொண்டை ஆகியவைகளின் இயக்கம் சீராகும்.

 

4.உடல் வளம்பெறும்,மனம் விரியும்.

 

5.வாதக் கோளாறுகள்,மூலநோய்,ஆஸ்துமா,சர்க்கரைவியாதி,சித்த பிரமை போன்ற நோய்கள் கட்டுப் படுத்தப் படுகின்றன.