சர்பாசனம்
 
செய்முறை:
.குப்புறப் படுத்துக் கால்களை நீட்டி நுனிக் கால்களின் மேல்புறம் தரையில் பதித்து இரு கால்களையும் இணைத்து வைக்கவும்.
 
.முகவாய்க்கட்டை தரையிலிருக்க,கைகளைக் கோர்த்து தொடைக்கு மேல் வைக்கவும்.
 
.நெஞ்சைத் தரையிலிருந்து எவ்வளவு உயர்த்த முடியுமோ அந்த அளவு  உயர்த்திக் கைகளையும் மேலே உயர்த்தவும்.பார்வை நேராக இருக்கட்டும்.
 
.ஆரம்ப நிலையில் மூச்சை சுவாசித்து இறுதி நிலையில் கும்பகம் செய்து ஆரம்ப நிலைக்கு திரும்பும்போது  மூச்சை வெளிவிடவும்.
 
 
 
பலன்கள்:
 
.இது ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஏற்ற ஆசனமாகும்.
 
.சுவாசத்தை சீராக்குகிறது.
 
.மார்புப் பகுதி வலுவடைகிறது.
 
.இதயத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன