௨.புஜங்காசனம்
செய்முறை:
௧.கால்களைச் சேர்த்துவைத்துக் குப்புறப் படுக்கவும்.உள்ளங்கால்களை மேலே பார்த்தவாறு
வைக்கவும்.முழங்கைகளை மடக்காமல் நீட்டிக்கவும்.
௨.கைகளை உள்பக்கமாக இழுத்துவயிற்றுப்பகுதிக்கருகில் பக்கவாட்டில் வைக்கவும்.உள்ளங்கைகள் தரையில் பதிய வேண்டும், முகவாய் தரையிளிருக்க வேண்டும்.
௩.மூச்சினை உள்ளிழுத்து உடலின் முன்பகுதியைசிறிது,சிறிதாக உயர்த்தி பார்வையை மேலே கொண்டு வரவும்.
௪.மூச்சினை வெளிவிட்டு நிலை ௨ க்கு வரவும்.
௫.கைகளை முன்புறம் நீட்டி ஆரம்ப நிலைக்குத் திரும்பவும்.
பலன்கள்:
௧.முதுகெலும்பு பழம் பெறுகிறது.
௨.முதுகு வலை குறைகிறது.
௩.தொப்பையைக் குறைக்கிறது.
௪.ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களை நீக்குகிறது.