பூர்ண புஜங்காசனம்
செய்முறை:
௧.உள்ளங்கைகள் தரையில் பதிய குப்புறப் படுக்கவும்.
௨.இடுப்பை வளைத்து தலையை பின்புறம் வளைத்து ஆகாயத்தைப் பார்ப்பது போல் செய்யவும்.
௩.முழங்காலை மடக்கி பாதத்தால் தலையைத் தொடவும்.
௪.இந்நிலையில் சில நொடிகள் இருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.வயிற்றுத் தொப்பைக் குறையும்.
௨.முதுகுத் தண்டும் ,கழுத்தும் வலுவடைகின்றன.
௩.கால்கள் மற்றும் இடுப்பின் வளையும் தன்மை அதிகரிக்கும்.