பிரசாரித்த பாதோத்தாணாசனம்
செய்முறை:
௧.மூச்சை உள்ளிழுத்து கால்களை ௫ அடி இடைவெளிவிட்டு அகலமாகப் பரப்பி நிற்கவும்.மூச்சை வெளிவிட்டு உள்ளங்கைகளைக் கால்களுக்கிடியே நேர்கோட்டில் தரையில் பதிக்கவும்
௨.மூச்சை உள்ளிழுத்து தலையை உயர்த்தவும்,மூச்சை வெளிவிட்டு உச்சந்தலையை தரையில் வைக்கவும். உடலின் எடையை கால்கள் தாங்க வேண்டும்.
௩.தலை,பாதங்கள் மற்றும் கைகள் ஒரே நேர் கொட்டிலிருக்க வேண்டும்.
௪.இந்நிலையில் சாதாரணமாக சுவாசம் மேற்கொண்டு சிறிது நேரமிருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.இரத்த ஓட்டம் உடலின் மேற்புறமும்,தலையிலும் அதிகரிக்கிறது.
௨.உடல் எடை குறைகிறது.
௩.முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை பெறுகிறது.