௧௮.பரிவிருத்த திரிகோணாசனம்
செய்முறை:
௧.கால்களை ஒரு மீட்டர் அளவு நன்றாக அகட்டி வைத்து உள்ளங்கைகள் கீழ்நோக்கக் கைகளைப் பக்க வாட்டில் நேராக வைத்து நிற்கவும்,மூச்சை இழுக்கவும்.
௨.இடுப்பை வளைத்து வலது பக்க உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் பதிக்கவும். உயர்த்திய இடது கையின் மேல் பார்வையிருக்க மூச்சை வெளிவிடவும்.
௩.இதே நிலையிலிருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இதே போன்று மறுபுறமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
௧.வயிற்றுப் புற உள்ளுறுப்புகள் சீரடைகின்றன.
௨.சிறுநீரகச் செயல்பாடு அதிகரிக்கிறது.
௩.வயிற்றுக் கோளாறுகள் அகல்கின்றன.
௪.மூச்சுப் பிடிப்பு அகல்கிறது.