௧.பாதஹஸ்தாசனம்
செய்முறை:
ஆரம்ப நிலை:
கால்களை இணைத்து பக்கவாட்டில் உடம்புடன் இணைத்து இருக்கவும்
௧.நேராக நின்று கைகளை தரைக்கு இணையாக பக்கவாட்டில் நீட்டவும்,உள்ளங்கைகள் தரையைப் பார்த்து இருக்கவும்
௨.கைகள் மேல்நோக்கி உயர்த்தவும்,உள்ளங்கைகள் முன்புறம் பார்த்து இருக்கவும்.
௩.முன்னே குனிந்து இடுப்பின் மேற்பகுதி ஒரே நேர்கோட்டில் தரைக்கு இணையாக இருக்கவும். உள்ளங்கைகள் தரையை பார்த்து இருக்கவும்.
௪.உள்ளங்கைகளை தரையில் கால்களுக்கு பக்கவாட்டில் பதிக்கவும். நெற்றி முழங்கால்களை தொடவும், முழங்கள் மூட்டு வளையாமல் இருக்கவும். இந்நிலையில் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலைக்கு மெதுவாகச் செல்ல வேண்டும்.
பலன்கள் :
௧.தொடை சதைகள் வலிமை பெறுகின்றன.
௨.முதுகெலும்பு நன்கு வளர்கிறது.
௩.முதுகு வலி நீங்குகிறது.
௪.அஜீரண கோளாறுகள் நீங்குகின்றன.