௨௦.பார்ஸவகோணாசனம்
செய்முறை:
௧.மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே இரண்டு கால்களுக்கு ௧ மீட்டர் முதல் ௧.௫ மீட்டர் இடைவெளி விட்டு நிற்கவும்.உடம்பைத் திருப்பாமல் வலது பாதத்தை மட்டும் ௯௦ டிகிரி வலது புறம் திருப்பவும்.
௨.மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் வளைந்து வலது பக்க தொடை தரைக்கு இணையாக இருப்பது போல் வைக்கவும்.வலது பக்க உள்ளங்கையை வலது பாதத்திற்கு பக்கத்தில் தரையில் பதிக்கவும் .
௩.இடது கையை உயர்த்தி இடது புறம் இடது காதை தொடுமாறு நீட்டவும். சாதரண சுவாசம் மேற்கொண்டு பார்வையை இடது கை விரல்களின் மேல் செலுத்தவும்.
௪.இதே நிலைகள் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதுபோன்ற மறுபுறமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
௧.மார்பு விரிவடைகிறது.
௨. கை,கால்களில் மூட்டுகள் வலிமையடைகின்றன .
௩.நீரிழிவு மற்றும் பல மூட்டு வலிகள் நீங்குகின்றன.