மண்டுகாசனம்
செய்முறை:
௧.கால்களை நீட்டி உட்காரவும்.
௨.வலது குதிகாலை மடித்து வலது புட்டத்திலும்,இடது குதிகாலை மடித்து இடது புட்டத்திலும் வைத்து நேராக உட்காரவும்.
௩.இரண்டு கைவிரல்களையும் மூடிக்கொண்டு,இரண்டு கை முட்டிகளையும் கவிழ்த்து எதிரெதிரே சேர்த்து வைத்துக் கொள்ளவும்.கைமுட்டிகள் இரண்டையும் அடிவயிற்றில் ஒட்டிவைத்து மூச்சை வெளிஏற்றிய படியே முன்னோக்கிக் குனிந்து பார்வையை முன்னோக்கிச் செலுத்தவும்.
௪.சிறிதுநேரம் இந்நிலையில் இருந்துவிட்டு,மூச்சை இழுத்துக் கொண்டேநிமிரவும்.
௫.மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.கணையம் சீரடைவதால் சர்க்கரை வியாதியின் அளவு குறையும்.
௨.வயிற்று வலி நீங்கும்,வயிற்றுத் தசைகள் வலுப்பெறும்.
௩.இதயத் துடிப்பு சீராகும்.