மகாமுத்ரா
செய்முறை:
௧.கால்களை நீட்டி உட்காரவும்.வலது காலை மடக்கி வலது குதத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.
௨.வலது கால் பாதமும்,கட்டை விரலும் இடது தொடையோடு ஒட்டியிருக்க வேண்டும்.
௩.கைகளை முன் நீட்டி வலது காலின் கட்டை விரலைப் பிடிக்க வேண்டும்.
௪.முதுகும்,இடது காலும் மடங்காமல் இருக்க இந்நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்கவும்.மூச்சை நன்றாக இழுத்து விடவும்.
௫.பிறகு மெதுவாக ஆரம்பநிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.ஜீரண சக்தி மேம்பாடு அடையும் .
௨.கால்கள் வலுப்பெறும்.
௩.அட்ரீனல் சுரப்பியின் சுரக்கும் தன்மை அதிகரிக்கும்.
௪.வயிற்றுத் தசைகள் மேம்பாடடையும்.