காதி சக்ராசனம்
 
 
செய்முறை:
 
.கால்களை  இரண்டு அடி  தள்ளி  வைத்து  நிற்கவும்.
 
.மூச்சை உள்ளிழுத்து  கைகளை பக்கவாட்டில்  உயர்த்தவும்.
 
.மூச்சை வெளிவிட்டு  உடலை இடது பக்கம்  திருப்பவும்.
 
.வலது கையை  இடது பக்க தோள்பட்டையில்  வைக்கவும். இடது கை பின் உடலைச் சுற்றி வலது  பக்க இடுப்பை பற்றியவாறு இருக்க வேண்டும்.
 
.சில நொடிகள் மூச்சை நிறுத்தி பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
.இதே முறையில்  அடுத்த பக்கம் செய்யவும்.
 
 
பலன்கள்:
 
 
.முதுகுத் தண்டு,இடுப்பு வலுப்பெறுகின்றன.
 
.கூன்முதுகு நிமிர்கிறது.
 
.உடற்சோர்வை அகற்றி புத்துணர்ச்சி அளிக்கிறது.