௧௪.டோலாசனம்
செய்முறை:
௧.கால்களை ஒரு மீடர் இடைவெளி விட்டு நிற்கவும். கைகளை உயர்த்தி விரல்களைக் கோர்த்து கழுத்துக்கு பின்னால் வைக்க வேண்டும்.முழங்கைகள் பக்கவாட்டில் பார்த்த வண்ணமிருக்க வேண்டும்.
௨.மூச்சை நன்றாக இழுத்து வலது பக்கம் திரும்பி உடலைக் குனிந்து மூச்சை வெளியேற்ற வேண்டும். கால்கள் திடமாக தரையூன்றியிருக்க வேண்டும்.
௩.தலையை வலது பக்க முழங்காலுக்கு எவ்வளவு நெருக்கமாக கொண்டு வரமுடியுமோ அந்த அளவுக்குக் கொண்டு வர வேண்டும்.
௪.மூச்சை நிறுத்தி இதே போல் தலையை இடது பக்க முழங்கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
௫.மீண்டும் தலையை வலது பக்க முழங்காலுக்குக் கொண்டு வந்து மெதுவாக ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.
பலன்கள்:
௧.தண்டுவடத்தில் உள்ள நரம்புகள் புத்துணர்ச்சி அடைகின்றன.
௨.தலை மற்றும் முகங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
௩.பின்பகுதித் தசைகளும்,வயிற்றுத் தசைகளும் வலுப்பெறுகின்றன.