பூரண டைடாளியாசனம்
செய்முறை:
௧.தரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் மடக்கி உள்பாதம் ஒன்றோடொன்று சேருமாறு வைக்கவும்.
௨.இரண்டு கைகளாலும் பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும்.
௩.முழங்கால்களை மேலும் கீழுமாக அசைக்கவும்.முழங்கால்கள் கீழே வரும்போது தரையைத் தொடட்டும்.
பலன்கள்:
௧.நீண்ட நேரம் ஓடிய களைப்பை போக்குகிறது.
௨.முழங்கால்களுக்கு வளையும் தன்மை கொடுக்கிறது.
௩.தசைகள் வலுப்பெறுகின்றன.