அதோமுக ஸ்வானாசனம்                               
 
செய்முறை:
 
.குப்புறப் படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத்     தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும்.
 
.மூச்சை வெளிவிட்டு  உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும்.
 
.முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை  முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும்.
 
.இந்நிலையில்  ஆழமாகச் சுமார் ஒரு நிமிடம் சுவாசித்து மெதுவாக  ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
.விளையாட்டு வீரர்களின் களைப்பைப் போக்கும்.
 
.கணுக்கால்கள்,தோள்பட்டை வலுப் பெறுகின்றன.
 
.இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு  இது ஏற்ற  ஆசனமாகும்.
 
.இதயம் சரிவரச் செயல்படுகிறது