அர்த்தமத்ஷ்யோதிராசனம்
செய்முறை:
௧. .கால்களை முன் நீட்டி உட்காரவும்.
௨.வலது காலை மடக்கிக் குதிகாலை தொடையின் கீழ்ப் பாகத்தில் வைக்கவும்.
௩.இடது பாதத்தை வலது தொடையின் வலதுபக்கத்தில் முழங்காளுக்கருகில் வைக்கவும். கால்களிருண்டும் தரையில் ஊன்றியிருக்க வேண்டும்.
௪.வலது கையை முதுகுப் பக்கமாகச் சுழற்றி இடதுபக்கத் தொடையின் மீது வைக்கவும்.
௫.இடது கையால் வலது காலின் விரல்களைப் பிடிக்கவும்.இந்நிலையில்சிரித்து நேரமிருக்கவும்.
௬.மெதுவாகப் படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும்.
பலன்கள்:
௧.கீழ் முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
௨.இடுப்பைச் சுற்றியுள்ள வேண்டாத தசைகளைக் குறைக்கிறது.
௩.மலச்சிக்கல்,அஜீரணம் போன்றவை நீங்குகிறது.