.அர்த்த சலபாசனம்
 
சலபம்  என்ற  சொல்லிற்கு    வெட்டுக்கிளி  என்று பொருள் படும்.இவ்வசனத்தின் இறுதி நிலை வெட்டுக்கிளி போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது.
 
அர்த்த  - பாதி
 
செய்முறை:
 
.விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும்.கைகளைத் தலைக்கு மேல் நேராக முகவாய்க் கட்டை தரையில் பதியுமாறு வைக்கவும்.
 
.இரு கைகளையும் ஒரே நேரத்தில் பக்கவாட்டில் இழுத்து விரல்களை மூடி ,அடி வயிற்றுப் பகுதியில் மேல்புறம் பார்த்தவாறு வைக்கவும்.
 
.கைகளை அழுத்தும்  ஆற்றலால் வலது பக்க முழங்காலை வளைக்காமல் காலை மேலே உயர்த்த வேண்டும்.முகவாய்க்கட்டை தரையில் பதிந்திருக்கச் செய்து,மூச்சினை உள்ளிழுக்க வேண்டும்.
 
.வலது பக்க முழங்காலை வளைக்காமல் கீழே கொண்டு  வரவும்.முகவாய்க்கட்டை தரையில் பதிந்திருக்குமாறு  செய்து,மூச்சினை வெளிவிட வேண்டும்.
 
.கைகளைப் பக்கவாட்டில் நீட்டி முன்புறம் கொண்டுவரவும்
 
குறிப்பு:
 
இத்தனை இடத்துப் பக்கத்திலு செய்யவும்.
 
 
பலன்கள்:
 
.வயிற்றுத் தசைகள் வலுப்பெறும்.
 
.நுரையீரல் வலுப்பெறும்.
 
.ஈரல்,கணையம்,சிறுநீர்ப்பை போன்ற உள்ளுறுப்புகள் தூண்டப் பெற்று நன்கு செயல்படும்.
 
.கைவிரல் சக்தி பெறுகிறது.
 
.மலச்சிக்கல் நீங்கும்.